by wp_shnn

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானம் மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு மிகுந்த அவதானத்துடன் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுர்வேத துறையின் ஒழுங்குமுறை பொறுப்பிலிருந்து விலகியிருக்கும் போது தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் புதிய உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்