மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து மன்னா கத்தியை காண்பித்து மிரட்டி பணம், நகைகள் கொள்ளை ! on Monday, February 03, 2025
அநுராதபுரம் – தஹய்யாகம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு கொள்ளையர்கள் அங்கிருந்த உரிமையாளர், பணியாளர்களிடம் மன்னா கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களை காண்பித்து மிரட்டி 10 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு கொள்ளையர்களும் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு பெண்களின் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.