மட்டக்களப்பில் யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்

by admin

மட்டக்களப்பில் யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம் ! on Monday, February 03, 2025

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருவதாவது… குறித்த நபர் வயலுக்கு காவலுக்கு சென்றவேளை திங்கட்கிழமை(03.02.2025) அதிகாலை 02.00 மணியளவில் யானை துரத்திச் சென்றுள்ளது. யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு குறித்த நபர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் முதலைகுடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்