இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம் !

by wp_shnn

இரத்து செய்யப்பட்ட பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம் ! on Monday, February 03, 2025

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு சம்பவம் காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 ஆம் தர இறுதிப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கப் பொதுத் தரப் பரீட்சை நடாத்தப்படும் போது மேற்கொள்ளப்படும் பொலிஸ் பாதுகாப்பில் இந்தப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்