4
on Monday, February 03, 2025
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் (2) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like these posts crime