கொங்கோவின் கிழக்கில் உள்ள கோமா நகரத்தில் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற மோதல் காரணமாக 775 பேர் உயிரிழந்துள்ளனர் என கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நகரம் தற்போது கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது.
எனினும் ஏனைய பகுதிகளை நோக்கி கிளர்ச்சியாளர்கள் நகர்வதை கொங்கோ இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது சில கிராமங்களை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டுள்ளது கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோமா நகரின் பிரேத அறைகள் மருத்துவமனைகளில் 773 உடல்கள் உள்ளன ,2800 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர் என கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
உயிரிழப்புகள் அதிகமாகயிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் கோமா நகரத்தின் வீதிகளை சுத்தம் செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்,இதன்காரணமாக உயிரிழப்புகள் குறித்த இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என தெரிவித்துள்ள கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குடிநீர் உட்பட அடிப்படை சேவைகளை வழங்குவதாக கிளர்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து கோமா நகரமக்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பியவண்ணமுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.
நான் களைப்படைந்துவிட்டேன் ,ஒவ்வொரு பக்கத்திலும் யாராவது ஒருவர் உறவினை இழந்துள்ளார் என 25 வயது ஜீன் மார்கஸ் தெரிவித்துள்ளார். இவரும் வன்முறை காரணமாக உறவுகளை இழந்துள்ளார்.
கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிகுழுவிற்கு டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது.
30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த மோதல்களில் சிக்குண்டுள்ளது.
30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹ_ட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹ_ட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது.
அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர் என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சிஇனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது.
கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என குற்றம்சாட்டுகின்றது.