by wp_shnn

தனித்துவம் வாய்ந்த வேளாண் விளைபொருட்​களுக்கு சர்வதேச சந்தை​களில் நல்ல விலை கிடைக்க வசதியாக பண்ருட்டி பலாப்​பழம், சாத்​தூர் சம்பா மிளகாய், கொல்​லிமலை மிளகு, திருநெல்​வேலி சென்னா இலை உட்பட 34 வேளாண் விளைபொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கப்​பட்டு உள்ளது.

புவிசார் குறி​யீடு என்பது ஒரு குறிப்​பிட்ட புவி​யியல் இருப்​பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்ற​வற்றுடன் தொடர்​புடைய தனித்​தன்மை வாய்ந்த பொருட்​களுக்கு வழங்​கப்​படும் அடையாளம் ஆகும். புவிசார் குறி​யீடு பெறும் பொருட்​களுக்கு சர்வதேச சந்தை​யில் நல்ல விலை கிடைக்​கும்.

அதன் அடிப்​படை​யில் தமிழக வேளாண்மை – உழவர் நலத்​துறை சார்பில் அண்மை​யில் 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறி​யீடு பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கப்​பட்​டுள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரி​வித்​தனர். அதன்​படி, பண்ருட்டி பலாப்​பழம், முந்​திரி, சாத்​தூர் சம்பா மிளகாய், தூயமல்லி அரிசி, புளி​யங்​குடி எலுமிச்சை, சேலம் கண்ணாடி கத்தரி, ராமநாத​புரம் சித்திரை கார் அரிசி, கவுந்​தப்​பாடி நாட்டுச் சர்க்​கரை, செட்​டிக்​குளம் சின்ன வெங்​கா​யம், கிருஷ்ணகிரி அரசம்​பட்டி தேங்​காய், கிருஷ்ணகிரி பன்னீர்​ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தேங்​காய், மூலனூர் முருங்கை, சாத்​தூர் வெள்​ளரி, தஞ்சாவூர் வீரமாங்​குடி அச்சு வெல்​லம், தூத்​துக்​குடி – விளாத்​தி​குளம் மிளகாய், கடலூர் கோட்​டி​முளை கத்தரி, மதுரை செங்​கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, கன்னி​யாகுமரி ஆண்டார்​குளம் கத்தரி, விருதுநகர் அதலக்​காய், திண்​டிவனம் பனிப்​பயறு, கரூர் சேங்கல் துவரை ஆகிய​வற்றுக்​கும், ஜவ்வாது மலை சாமை, ஈரோடு மாவட்​டம், சத்தி​யமங்​கலம் செவ்​வாழை, நாமக்கல் மாவட்டம் கொல்​லிமலை மிளகு, ராணிப்​பேட்டை மாவட்டம் மீனம்​பூர் சீரக சம்பா, திண்​டுக்கல் மாவட்​டம், ஜயம்​பாளையம் நெட்டை தென்னை, தருமபுரி மாவட்டம் உரிகம்​புளி, கடலூர் மாவட்டம் புவனகிரி மிதி பாகற்​காய், கரூர், சேலம் மாவட்​டங்​களைச் சேர்ந்த செஞ்​சோளம், திருநெல்​வேலி சென்னா இலை, தேனி மாவட்​டம், ஓடைப்​பட்டி விதை​யில்லா திராட்சை, கரூர், திண்​டுக்​கல், திருப்​பூர் மாவட்​டங்​களி​லுள்ள செங்​காந்​தாள் கிழக்கு ஆகிய 34 வேளாண் விளைபொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு பெற விண்​ணப்​பிக்​கப்​பட்டு உள்ளது.

இதுகுறித்து புவிசார் குறி​யீடு சட்டத்​தில் பதிவு பெற்ற அட்டர்​னி​யும் சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞருமான சஞ்சய்​காந்தி கூறும்​போது, “தமிழகத்​தில் விண்​ணப்​பிக்​கப்​பட்ட 145 பொருட்​களில் கடந்​தாண்டு டிசம்பர் வரை 59 பொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு கிடைத்​திருக்கிறது. தோவாளை மாணிக்​கம் பூ​மாலை, கும்​பகோணம் வெற்றிலை, சேலம் ​மாம்​பழம், நாகை சீரக சம்பா அரிசி உள்​ளிட்ட 10 பொருட்​களுக்கு ​விரை​வில் பு​விசார் குறி​யீடு கிடைக்​கும்” என்றார்​.

தொடர்புடைய செய்திகள்