மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை; சிகிச்சைக்காக செல்லும் பாலத்தீனர்கள்

காணொளிக் குறிப்பு, எகிப்து சென்ற பாலத்தீனர்கள்

மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை; சிகிச்சைக்காக செல்லும் பாலத்தீனர்கள்

பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காஸாவில் இருந்து சிறுவர்கள் எகிப்துக்கு அழைத்து செல்லப்படும் காட்சி இது.

கடந்த மே மாதம் எகிப்து- காஸா இடையே உள்ள ஒரே வழியான ரஃபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி மூடியது.

அதன் பிறகு, முதன் முறையாக தற்போது இந்த எல்லை திறக்கப்பட்டு 50 நோயாளிகள் சிகிச்சைக்காக எகிப்துக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழைத்து செல்லப்பட்டனர் அவர்களுள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த வழியாக காஸா மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.