ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு கண்டி இராச்சியத்தின் இறுதி அரசனான ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனின் 193 ஆவது நினைவு தினம் அவரது வழித் தோன்றல்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கண்டியில் நினைவு கூறப்பட்டது.
இந்த நிகழ்வு கண்டியிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஶ்ரீ நாத தேவாலய வளாகத்தில் சமய நிகழ்வுகள் நடை பெற்றன.
இவ்வைபவத்தில் அரசனின் மனைவியான தங்கம்மா அரசியின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு பூஜைகளையும் மேற்கொண்டனர்.
அதனை அடுத்து ஶ்ரீ தலதா மாளிகையை அடுத்துள்ள இராஜமாளிகைக்கும் சென்று ஶ்ரீ விக்கரம இராஜசிங்கனின் உருவச்சிலை மற்றும் புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.
இராஜசிங்க மன்னனின் உறவினர்களின் ஒருவர் எனக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த அருள் செல்வராஜ் இது பற்றித் தெரிவிக்கையில்,
வருடா வருடம் தமது உறவினர்கள் மேற்படி நினைவேந்தல் மற்றும் சமய நிகழ்வுகளை மேற்கொள்வதாகக் கூறினார்.
மேற்படி ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனது அரச மாளிகையை புனரமைத்துத் தந்த அமெரிக்க அரசிற்கும் அதன் தூதுவர் ஜூலி சங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.