கட்சி மாறியவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கிய யுகம் நிலவியதாக பிரதமர் தெரிவிப்பு.

by wp_shnn

கடந்த ஆட்சியின்போது உரிய முறைமைகளுக்கு அப்பால் அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சி மாறி அரசாங்கத்துடன் இணைபவர்களுக்கு லஞ்சமாக அமைச்சுக்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். இந்தச் சந்திப்பு கண்டி, தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமைச்சுக்களின் எண்ணிக்கையினை 25 ஆக வரையறுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் கல்வியமைச்சின் கீழ் சகல கல்வி நிறுவனங்களும் கொண்டுவரப்படும்.

பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வித் திட்டத்திற்குப் பதிலாக, சமூதாயத்தை மாற்றக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வி முறையினைத் தயாரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்