by smngrx01

ஜனாதிபதி பாதுகாப்பு டிஃபென்டர் விபத்து – நால்வர் படுகாயம் தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றொரு வாகனத்தில் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களின் சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கை பொலிஸில் பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்