யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால் வெளியீடு யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயனிகளையும் இணைப்பதற்கான பிரதான சரியான பெறுமதிப்படுத்தப்பட்ட தகவல் நூல் இன்மையினால் சுற்றுலா அபிவிருத்தியில் அவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதனை உணர்ந்து, இவ் பிரதான இடை வெளியை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்டச் செயலகத்தால் பல்வேறு நூல்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு அங்கமாக மேற்படி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.