வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம் !

by sakana1

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம் ! on Friday, January 31, 2025

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரதிவாதியாக பெயரிடுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐவரடங்கிய குழுவின் உறுப்பினர் அமல் ரணராஜா நேற்று விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, புதிய பெஞ்ச் ஒன்றை பெயரிடுவதற்கான உரிய மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக யாதுன்னே கோரயா, பி குமரன் ரட்ணம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்த மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டது.

இது தொடர்பான மனு பெப்ரவரி 7ஆம் திகதி புதிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனவே, சட்டமா அதிபரின் தீர்மானத்தை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்