by sakana1

பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், லியோனார்டோ டா வின்சி என்ற இத்தாலிய ஓவியரால் வரையப்பட்டது. இந்த ஓவியம் லியோனார்டோவின் மிகவும் பிரபலமான மற்றும் அவரது கலைத்திறனின் உச்சகட்டமாகக் (மாஸ்டர் பீஸ்) கருதப்படுகிறது.

மோனலிசா ஓவியம் இன்று பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மிகவும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2031 ஆம் ஆண்டுக்குள் மோனலிசா ஓவியம் இடமாற்றம் செய்யப்படும். பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டண மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படும், எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிப்பவர்கள் அல்லாதவர்கள்  இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின்  சுற்றுலாப் பயணிகள்  கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிளவான பார்வையாளர்களின் வருகையினால் சனநெரிசல், உள்கட்டமைப்புகளில் பிரச்சினைகள்  குறித்து  லூவர் அருங்காட்சியகத்தின்  பணிப்பாளர் டெஸ் கார்ஸ் விடுத்துள்ள கோரிக்கைக்கு இம்மானுவேல் மக்ரோன் செவிசாய்த்துள்ளார்.

இம்மானுவேல் மக்ரோனுக்கு டெஸ் கார்ஸ் எழுதிய கடிதத்தில்,

லூவர் அருங்காட்சியகத்திற்கு புதுப்பொலிவை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஒரு புதிய நுழைவாயிலை ஏற்படுத்தவும் கண்ணாடிகளிலான பிரம்மாண்டமான பிரமிட்டும் அதன் நிலத்தடி லூபியும் 1989 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது.

தற்போது ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவதால்  கட்டமைப்பு ரீதியாக சமாளிக்க முடியவில்லை.

அத்துடன் மோனாலிசா ஓவியம் “அனைவரின் பார்வையில், மோனாலிசாவின் விளக்கக்காட்சி… கவனிக்கப்பட வேண்டிய ஒன்று”

நாளாந்தம் 30,000 பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்கு வருபவர்களில் முக்கால்வாசி பேர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியத்தைப் பார்க்கச் செல்கிறார்கள், ஆனால் அந்த அனுபவம் ஒரு சகிப்புத்தன்மை சோதனையாக மாறிவிட்டது. பார்வையாளர்கள் சராசரியாக 50 வினாடிகள் படத்தைப் பார்த்து புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

“பொதுமக்கள்… ஓவியக் கலைஞரின் பணியைப் புரிந்து கொள்ள வழி இல்லை, இது எங்கள் பொது சேவையின் முழுப் பணியின் மீதும் கேள்விகளை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அருங்காட்சியகத்தின் கிழக்கு முகப்பில் ஒரு அறை வடிவமைக்கப்படும்.

உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், புதிய கழிப்பறை, உணவகம் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்கவும் வரும் ஆண்டுகளில் பாரிய மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்த செலவு பல நூறு மில்லியன் யூரோக்கள்.

டிக்கெட் விற்பனை, நன்கொடைகள் மற்றும் லூவர் அபுதாபியுடன் அருங்காட்சியகத்தின் ஒப்பந்தம் மூலம் நிதியளிக்கப்படுவதால், இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்படாது என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்