by sakana1

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடுமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பொது எதிரணியாக செயற்பட வேண்டியது அவசியம் : ரணில் விக்கிரமசிங்க ! on Friday, January 31, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடுமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பொது எதிரணியாக செயற்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, அதற்கான தமது ஆதரவினை பாராளுமன்றத்துக்கு வெளியில் பூரணமாக வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வியாழக்கிழமை (30) இரவு கொழும்பில் உள்ளவொரு தனியார் விடுதியில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துச் செயற்பட்ட முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அநுரபியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்