டீப்சீக்: AI உலகின் புதிய சகாப்தம் – சீன செயலியை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா?
சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு துறையில், தாமே தான் நம்பர் ஒன் என்று கருதும் அமெரிக்காவின் இறுமாப்பையும் அசைத்துள்ளது.
“டீப்சீக்-ஆர் என்பது ஏஐ துறையின் ஸ்புட்னிக்” என்று மார்க் ஆன்றீசென் என்ற தொழில் முதலீட்டாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு இடையே போட்டியை தூண்டிவிட்ட, ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை அவர் குறிப்பிடுகிறார்.
தற்போது நடைபெறுவதை சொல்வதற்கு இதுவே மிக சரியான வார்த்தைகள். வார இறுதியில் ஆப்பிளின் அமெரிக்க ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி டீப் சீக்.
திங்கட்கிழமைக்குள் இந்த செயலி, தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்காவின் முன்னிலை குறித்த பயம் எழுந்ததன் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு