பேரீச்சம் பழத்துக்கான விசேட பண்ட வரி குறைப்பு பேரீச்சம் பழத்துக்கான விசேட பண்ட வரி குறைத்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போது அமுலில் இருக்கும் 200ரூபா விசேட பண்டவரி ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு செவ்வாய்க்கிழமை 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிவரை செல்லுபடியாகும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்நாட்டு முஸ்லிம் மக்களின் பாவனைக்காக சவூதி அரேபியா 50 டெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இவ்வாறு சவூதி அரேபியாவால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் தற்போது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார். அவை நாட்டில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பகிந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.