தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை அழித்தொழிக்க எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உளவியல் புலனாய்வுப் போர் சிறிலங்கா பேரினவாத அரசின் புலனாய்வுக் கட்டமைப்புகளும், பிராந்திய வல்லரசின் கொள்கை வகுப்பு அரசியல் மற்றும் ஏனைய புலனாய்வுக்கட்டமைப்புகளும் இணைந்து மிகப்பெரிய உளவியல் புலனாய்வுப்போர் ஒன்றை தமிழர் தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்குதளமாக, தற்போது காணப்படும், தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை வழிகாட்டலில் இயங்கும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழீழத் தேசியக் கட்டமைப்புகள் எதிரிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.2009 மே 18 இல் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின்னர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் செல்நெறியை வழித்தடமாகக் கொண்டு,அனைத்துலகச் சட்டவிதிகளிற்கு மதிப்பளித்து வாழிட நாடுகளின் அரசியல்,இராசதந்திர,மனதாபிமானக் கட்டமைப்புகளின் கதவுகளைத் தட்டி நீதி, நியாயம் கேட்கும் எமது அனைத்துலகக் கட்டமைப்புகளின் வீரியத்தையும், விவேகத்தையும் கண்டு சிறிலங்காவின் மகாவம்ச மனோநிலையிலுள்ள பேரினவாதிகள் அச்சம்கொள்கின்றனர்.
அகண்ட பாரதக் கனவோடு மொழிவழித் தேசிய இனங்களை ஒன்றியம் என்னும் போர்வைக்குள் கூட்டாக வைத்திருக்கும் பிராந்திய வல்லரசு சீற்றம் கொள்கிறது. சிறிலங்கா சிங்கள தேசம் கட்டுக்கடங்காமல் சீன, அமெரிக்க சார்புநிலையை எடுக்கும்போதெல்லாம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலட்சக்கணக்கான எம்மின மக்கள் கடல்தாண்டி கை தொடும் தூரத்தில் இருந்து கொண்டு எழுப்பிய அவலக்குரல் இன்னும் எம் காதுகளில் ஒலித் துக்கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்தது. அப்போதெல்லாம் வராத கரிசனை இப்போது தமிழீழத் தமிழர்கள் மீது வந்துள்ளது ஏன்? ஏனென்றால் பிராந்திய பூகோள அரசியலை கையாள்வதற்கு தமிழீழமும் தமிழர்களும் தேவைப்படு கின்றனர்.எனவே எம்மீது தொடுக்கப்பட்டுள்ள புலனாய்வுப்போரிற்கு பக்கபலமாக பின் தளமாக பிராந்தியம் செயற்படுகிறது. 80களின் ஆரம்ப காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக,தன்னால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாததை நன்றாகஉணர்ந்துகொண்டார்.
எனவே,தமிழீழத் தாயகத்தில் இருந்து கொண்டு விடுதலைப்போரை வழிநடாத்துவதுதான் சிறந்ததும், பாதுகாப்பானது மென முடிவெடுத்து, தமிழீழத் தாயகத்திற்கு வந்து இறங்கினார்.அதன்பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழத்தைவிட்டு எப்போதுமே வெளியேறவில்லை. எனவே,எப்போது சண்டை செய்ய வேண்டும், எப்போது சமாதானம் செய்ய வேண்டும், எதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெளிவாகப் பதியம் போட்டார். விடுதலைத் தத்துவங்களும் சித்தாந்தங்களும் பலமாகக் கட்டமைக்கப்பட்டால் இனத்தின் போராட்டம் அந்த சிந்தனை வழித்தடத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் என்பது தேசவிடுதலைக்கான அடிப்படைத் தத்துவம் அந்த வகையில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை என்ற தேச விடுதலைச் சித்தாந்தம் எம்மிடம் உள்ளது. அதுவே 2009 மே 18 இற்குப் பின்னர் எம்மை வழிநடத்துகின்றது. ஆகவே, பிரபாகரன் சிந்தனை என்ற விடுதலைச் சித்தாந்தத்தை
தமிழர்களிடமிருந்து பிரித்தெடுத்து அழித்தால் மட்டுமே தமிழீழவிடுதலைப் போராட்டத்தை வேரோடு பிடுங்கி அழிக்கலாம் என்ற முடிவிற்கு சிறிலங்கா பேரினவாதமும், பிராந்தியமும் வருகின்றது.
அதன் வெளிப்பாட்டு நடவடிக்கைதான் தற்போது 3 ஆண்டுகளாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும், தேசியத்தலைவரின் குடும்ப அங்கத்தவர்கள் உயிரோடு உள்ளனர், என்ற இந்த உளவியல் புலனாய்வுப் போர். எமது நீண்ட நெருக்கடி நிறைந்த தேசியச்செயற்பாட்டுக்களத்தில் தோளோடு தோள் நின்ற செயற்பாட்டாளர்கள் சிலரும் இந்த உளவியல் புலனாய்வுப் போரிற்குள் சிக்குண்டிருப்பதையும் நாம் அறிவோம். அது கவலைக்குரியதுதான்.ஆனால்,தேசத்தின் விடுதலைக்கான வழிவரைபடமாக இருக்கின்ற மேதகு பிரபாகரன் சிந்தனையை சிதைக்க முற்படும் எந்தச் சக்திகளையும் நாம் கடந்து செல்லவோ சகித்துக்கொள்வோ முடியாது.
ஏனென்றால்,மேதகு பிரபாகரன் சிந்தனை எமது உயிரினும் மேலானது. தமிழீழ விடுதலைக்கான சக்திவாய்ந்த ஆயுதம் அதுவாகும். தமிழீழ விடுதலைப்போரிலே 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர் விதைகளை நாங்கள் மாவீரர்களாக விதைத்துள்ளோம். இந்த மாவீரர்களின் சக்தி ஒருங்கிணைந்து மிகப்பலமான தேசிய ஆன்மாவாக உருவெடுத்துள்ளது. அது எங்களை எந்த தீயசக்திகளிடமிருந்தும் காக்கவல்லது. இந்த தேசிய ஆன்மா எதிரிக ளையும், துரோகிகளையும் தோலுரித்துக்காட்டும். இதிலிருந்து எவருமே ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. காலம் தனது கடமையை இதுவரை சரியாகவே செய்தது, இனியும் சரியாகவே செய்யும். விழிப்பே விடுதலையின் முதற்படி.
அனைத்துலகச்சிந்தனைப்பள்ளி.