தேர்தலிற்கு முன்னதாக இழுத்து மூடப்போவதாக அனுர அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த மன்னார் மற்றும் பூநகரி காற்றாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
மின் திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை ஒரு அலகுக்கு 6 அமெரிக்க சத்ததுக்கும் கீழே குறைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு அலகுக்கு 8.25 சதம் (டொலர்) என முன்மொழியப்பட்டது.அத்துடன் திட்டம் போட்டி ஏலம் கோரப்படாது வழங்கப்பட்டமையால் விமர்சனங்களை எதிர்கொண்டது.
திட்டம் ரத்து செய்யப்படாது, ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் 2022 இல் தொடங்கின.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் அவசியமாகும். அதில் சூழல் பாதிப்புகள் இருக்கும். ஆனால் எமது நாட்டுக்கு அதிக பயன்தரும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்படும்,
அதன்காரணமாகவே ஒரு அலகு 6 சதத்துக்கும் கீழான அமெரிக்கா டொலரை அரசாங்கம் முன்மொழிகிறது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரவின் டெல்லி பயணத்துடன் காற்றாலை திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.