by sakana1

தேசிய மக்கள் சக்தி பயணிக்கும் பாதையை மக்கள் ஓரிரு மாதங்களில் தெரிந்துகொள்ள முடியும் : நீதி அமைச்சர் ! on Tuesday, January 28, 2025

யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

ஒருசில நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கமும் பழைய அரசாங்கங்கள் சென்ற வழியிலேயே செல்கிறதா என சிலர் சந்தேகிக்கின்றனர்.

பணச் சலவை தொடர்பில் யோஷித்த ரஜபக்ஷ்வுக்கு எதிரான இந்த சம்பவம் இற்றைக்கு 8 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.

அதனால் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து பார்த்து யோசித்த ராஜபக்ஷ்விடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் குற்றப்புவனாய்வு பிரிவுக்கு ஆலாேசனை வழங்கப்பட்டிருக்கிறது.

யாரையும் சிறையில் அடைத்து பழிவாங்குவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அதனால் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

யோஷித்த ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்