சலுகைகள் குறைக்கப்படவோ அகற்றப்படவோ முடியாது முன்னாள் அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதற்கான உத்தேச விவாதத்தை அடுத்து, பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்து இது தொடர்பாக மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு மற்றும் உலகளாவிய சட்டக் கோட்பாடுகளின்படி அச் சலுகைகள் குறைக்கப்படவோ அல்லது அகற்றப்படவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார் .
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தியின் (NPP) விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஓய்வூதிய பலன்களை ரத்து செய்யவோ அல்லது சீரமைக்கவோ முடியாது என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவார் என்றார்.
“அதாவது NPP அறிக்கையை உருவாக்கிய குழுவில் நியாயமான சட்ட அறிவு உள்ள எவரும் பணியாற்றியதாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
“ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொண்டவுடன், அத்தகைய பதவியை வைத்திருப்பவர் அத்தகைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரிமையாளராகிவிடுவார். அதன் பின் ஓய்வூதியத்தை பாராளுமன்றம் தீர்மானிக்கும்.
இந்தச் சட்டப்பிரிவைத் தொடர்ந்து செய்யப்படும் எந்தத் திருத்தமும், ரத்துசெய்தலும் அல்லது மாற்றியமைக்கப்படுதலும், அதைத் தொடர்ந்து செய்யப்படும் சட்டமும் அல்லது இந்தச் சட்டத்திற்கு முரணான எந்த விதியும் பின்னோக்கிச் செயல்படாது. என அவர் அரசியலமைப்பின் 36 (2) வது பிரிவை மேற்கோள் காட்டினார்.
நியாயமான எதிர்பார்ப்பு கோட்பாட்டின் படி, ஓய்வூதிய பலன்களை இல்லாது செய்தல் போன்று சீரமைக்க முடியாது என்றார்.
“இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எதிர்பார்க்கப்படும் ஓய்வூதியப் பலன்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் ஓய்வு கால வாழ்க்கையைத் திட்டமிடுகிறார்கள். அதற்கேற்ப பணத்தைச் சேமிக்க முனைகிறார்கள். மக்கள் ஓய்வூதிய பலன்களை எதிர்பார்க்கும் போது, அவர்கள் சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை,” என்றார்