யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி

by adminDev

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். 

பணத்தினை பெற்றவர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாடு அனுப்பி வைக்காதமையால் , பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பணத்தினை பெற்ற ஆசிரியரை கைது செய்து யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும் , இளைஞனிடம் கையளிக்கிறேன் என மன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார். 

அதனை அடுத்து , ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை ஒத்திவைத்து. 

தொடர்புடைய செய்திகள்