மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் பலி

by adminDev2

மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் பலி on Sunday, January 26, 2025

மத்தியஸ்த சபைக்கு சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திஹகொட பெத்தங்கவத்தை விகாரையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்வில் இந்த சம்பவம் இடம்பெற்றமை குறித்த தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஹகொட பொலிஸ் நிலையத்தால் மத்தியஸ்த சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு தொடர்பாக, இருதரப்பினருக்கு இடையேயான பிணக்கினை தீர்க்க நேற்று நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்வில் இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலுக்கு வழிவகுத்தது, அதில் ஒருவர் காயமடைந்து மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த நபர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திஹாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்