6
மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்பட்டது மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஹுன்னஸ்கிரிய, கஹட்டகொல்ல பகுதி, வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) மாலை 6 மணிக்கு மூடப்பட்ட இந்த வீதி, இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டதாக, உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக பாறைகள் விழும் அபாயத்தால், கண்டி – மஹியங்கனை பிரதான வீதி கடந்த சில நாட்களாக இரவு வேளையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது