by adminDev2

குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு கருணை காட்டவேண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் ஆயர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினர் குறித்து டிரம்ப் அரசாங்கம் அறிவித்;துள்ள கொள்கைகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறித்து டிரம்ப் கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் எபிஸ்கொபல் தேவாலயத்தின் ஆயர் மரியன் புடே  Episcopal Bishop Mariann Edgar Budde””வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் அவரது மனைவி மற்றும் துணைஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட ஆராதனையின் போது அவர்களின் முன்னிலையில் ஆயர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜனநாயக,குடியரசு மற்றும் சுயேட்சை குடும்பங்களில் எல்ஜிபிடிகியு பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார்.

கடவுளின் அன்பான கையை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள்,எங்கள் தேசத்தில் தற்போது அச்சமடைந்துள்ள மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆண்டவனின் பெயரால் நான் கேட்டுக்கொள்கின்றேன் என ஆயர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்