2
கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது ! கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ வீதி பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உடஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவராவார்.
மேலும், குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, கல்கிஸ்ஸபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.