‘நம்புவது கடினம்’: 6 வயதிலேயே பருவமடையும் பெண்கள் – என்ன காரணம்?
இதை நம்புவது கடினம், ஆனால் சில பெண்கள் ஆறு வயதிலேயே பருவம் எய்தத் தொடங்குகிறார்கள்.
ஆகவே, பருவமடைதல் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்குகிறதா?
அமெரிக்காவில், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பெண்களுக்கு நான்கு ஆண்டுகள் முன்னதாகவே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் வயது வரம்புகள் குறைந்து வருகின்றன.
2000களில் பிறந்த அமெரிக்க பெண்களின் சராசரி பருவம் எய்தும் வயது பன்னிரண்டுக்கும் குறைவாக இருப்பதாக சமீபத்திய தரவு காட்டுகிறது.
தென் கொரியாவில், முன்கூட்டியே பருவமடைதல் 16 மடங்கு அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது 8 வயதுக்கு முன்பே.
ஆனால் ஏன்? அதற்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இருப்பினும் சில காரணங்களை விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு