by guasw2

அம்பலாந்தோட்டை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான தகவல் அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (22) இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்திற்கு காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீதியில் பயணித்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம்  கொக்கல்ல, கடவர பிரதேசத்தில் வசிக்கும்  29 வயதுடைய நபரொருவரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவருவக்கும்  காயங்கள் ஏற்படவில்லை.

இந்த நபர் மீது இதற்கு முன்னரும் இரு தடவைகள் கொலை முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொக்கல்ல, கடவர பிரதேசத்தில் வசிக்கும் “கடவர இஷார” என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான பிரதான காரணம் மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொக்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையே என பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்