2
பாராளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த உணவு கட்டணம் அதிகரிப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற குழு உறுப்பினர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று வியாழக்கிழமை (23) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் விருத்தினருக்கு மேலதிகமாக அறவிடப்படும் 275 ரூபாய் கட்டணத்தில் மாற்றமில்லை. அது அவ்வாறே பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.