2
5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரியொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்தில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காகவே சந்தேகநபர் இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.