இலஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி கைது ! on Thursday, January 23, 2025
02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கல்கிசை, காலி வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் எனவும் , அதிகரித்த சம்பள பணத்திற்கு இணங்க அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய ஊழியர் நலப் பணத்தை வழங்க வேண்டும் எனவும், நிறுவனத்தின் மீது உள்ள குற்றங்களை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பதற்கும், முறைப்பாட்டாளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்காகவும் சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.