by adminDev2

பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி பண மோசடி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி வங்கி கணக்கிலிருந்து மோசடியான முறையில் பணம் பெற்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் பேஸ்புக் கணக்கு ஒன்றிற்குள் ஊடுருவி வங்கி கணக்கிலிருந்து சுமார் மூன்று தடவைகள் மோசடியான முறையில் 07 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கத்தார் நாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்