9

by adminDev2

புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்துள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்;டத்தை நீக்குவது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி நீக்கவேண்டும் என மக்கள் மன்றம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் மன்றம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

புதிய அரசாங்கத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்ட தமிழ்  அரசியல் கைதி  சுப்பிரமணியம் சுவேந்திர ராஜனை கண்டி மக்கள் மன்ற உறுப்பினர்கள்இன்று சந்தித்தனர். .

15 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுவேந்திர ராஜன் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அறுகம்குடா சம்பவத்தைத் தொடர்ந்து 2024 ஒக்டோபரில் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் ஆனால் மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடுமாறு கூறப்பட்டுள்ளது.

அண்ணளவாக ஐந்து தசாப்தங்களாக இலங்கை அரசால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டு வரும் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் சுவேந்திர ராஜன் ஒருவர்.

1979 ஆம் ஆண்டு “தற்காலிகச் சட்டமாக” அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை அரசால் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அதிருப்தியாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்