2
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன.
சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன.
ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.