by wp_shnn

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, முன்பு ரூ. 76,000 க்கு விற்கப்பட்ட மருந்தை தற்போது ரூ.370 ற்கு விற்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது பேசிய வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, மருந்து விலைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவொன்றின் விசேட வைத்தியர் ஒருவர் இதய சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தின் விலை முரண்பாடுகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த மருந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படவில்லை என்றும், இதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டது என்றும் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் ஒரு விலைமனுவைப் பெற்றபோது, ​​அதில் ஒரு தடுப்பூசிக்கு சுமார் ரூ. 50,000 குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்தோம். NMRA இன் மீளாய்வுக் குழுவின் விசேட வைத்தியர் ஒருவர் வழக்கத்திற்கு மாறான விலை வேறுபாட்டைக் கண்டறிந்தார், அதன் காரணமாக அவர் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டார்,” என்று வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

மருந்தின் விலை 2018 இல் ரூ.76,000 ஆக இருந்ததாகவும் அந்த நேரத்தில் NMRA விலைக் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.. விநியோகத்தர்கள் குறிப்பிடும் விலைகள் மட்டுமே அப்போது பரிசீலிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“எனவே, இறக்குமதியாளர்கள் 2018 இல் ரூ.76,000 ற்கு இறக்குமதி செய்துள்ளனர். இருப்பினும், விநியோகத்தர் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்பதால், அந்த விலை இப்போது திருத்தப்பட வேண்டும். விலை மறுபரிசீலனை செய்யப்பட்டு மருந்துக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படும் என இறக்குமதியாளரிடம் தெரிவித்தோம்,” என்றார்.

தேவையான விசாரணைகளை அடுத்து, NMRA இந்த மருந்தை ரூ. 370க்கு விற்பனை செய்ய முன்மொழிந்துள்ளது, இதுவே உண்மையான விலை என வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கூறினார்.

தொடர்புடைய செய்திகள்