தனது பட்டத்தை நீக்குமாறு அமைச்சர் கோரிக்கை பாராளுமன்ற இணையத்தளத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிறிஷாந்த அபேசேனவின் பெயரில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘பேராசிரியர்’ என்ற பட்டத்தை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நேற்று இந்த மாற்றம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் கிறிஷாந்த அபேசேனவிடம் வினவியபோது, ’பேராசிரியர்’ என்ற பட்டத்தை வைத்திருந்தாலும், தற்போது பல்கலைக்கழக சேவையில் இல்லாததால் அதனை பயன்படுத்த விரும்பவில்லை என அமைச்சர் கிறிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
பாராளுமன்ற ஹன்சார்டில் தனது பெயரில் பேராசிரியர் என்ற தலைப்பு சேர்க்கப்படவில்லை என்று கூறிய அவர், தனது பல்வேறு ஆவணங்களிலும் அது இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயரில் உள்ளடங்கியிருந்த கலாநிதி பட்டமும் அமைச்சரின் கோரிக்கையை அடுத்து பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து அண்மையில் நீக்கப்பட்டது.
தான் அத் தகவலைப் பகிர்ந்து கொள்ளாத நிலையில்
குறித்த பட்டம் தனது பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார்