யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதடி பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசு ஒன்றின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் , குழந்தையை பிரசவித்த பெண் என சந்தேகிக்கப்படும் அப்பகுதியை சேர்ந்த 46 வயதான இரு பிள்ளைகளின் தாயை கைது செய்தனர்,
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் இளைய சகோதரி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ள மூன்று பெண்களையும் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்