காணொளிக் குறிப்பு, மத்தளம் இசைத்து அசத்தும் 6 வயது பெண் குழந்தை

தனித்துவமான இசையால் 6 வயதிலேயே சினிமா பிரபலங்களை ஈர்த்த நைஜீரிய சிறுமி

சோஃபியத் ஒலைட், 6 வயதான மத்தளம் இசைக்கும் கலைஞராவார். நைஜீரியாவில் வசிக்கும் இவர் சிறு வயதில் இருந்தே மத்தளம் இசைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘டாக்கிங் ட்ரம்’ என்பது மனிதர்களின் பேச்சைப் போன்று ஒலிக்கும் மத்தளமாகும். இதனை தென்மேற்கு நைஜீரியாவின் யொரூபா மக்கள் இசைக்கின்றனர்.

சோஃபியத்தின் அம்மா மற்றும் அப்பா குடும்பங்களில் யாருமே இத்தகைய இசையை இசைத்ததில்லை என்று விளக்குகிறார் அவருடைய அம்மா. தற்போது அங்குள்ள சினிமா பிரபலங்கள் பலரையும் ஈர்த்துள்ளார் சோஃபியத்.

தற்போது ஒரு படத்தில் நடித்த அவர் வருங்காலத்தில் வழக்கறிஞராக ஆசைப்படுகிறார். ஆனாலும் அவர் இசைப்பதை நிறுத்தமாட்டேன் என்றும் கூறுகிறார். அமெரிக்கா, லண்டன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்த இசைக்கருவியை இசைக்க அவர் ஆர்வமுடன் இருப்பதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.