by 9vbzz1

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை சேவையை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை இயக்குவதற்கான ஆலோசனை சேவையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குரிய ஆலோசனை சேவைகளுக்கான நிதி மற்றும் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குறிகாட்டிகளுக்கமைய விருப்பக் கூற்றுப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்காக 20 விண்ணப்பதாரிகள் விருப்பக் கூற்றுப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், 7 விண்ணப்பதாரிகள் முன் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளனர். அவற்றில் 5 நிறுவனங்கள் விபரங்களுடன் கூடிய முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தொழிநுட்ப விபரக்கூற்றுக்களைப் பூர்த்தி செய்துள்ள 03 நிறுவனங்களின் நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், குறித்த ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தத்தை எம்.எஸ். தொஹ்வா எஞ்சினீரிங் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்