யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மேலும் மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனேவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மூன்று லொறிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு லொறி, சம்பந்தப்பட்ட லொறிகளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக புனேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் நான்கு லொரிகளும் சேதமடைந்ததாகவும், லொரிகளில் பயணித்த இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.