இலங்கை – இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் !

by adminDev

இலங்கை – இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ! on Tuesday, January 21, 2025

இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு விமான சேவை நடவடிக்கைகளுக்குரிய படிமுறைகள் தொடர்பாக இலங்கை அரசும் இத்தாலி அரசும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றன.

அதற்கமைய இருநாடுகளுக்கிடையிலான விமான சேவைகள் ஒப்பந்தமொன்றைக் கையொப்பமிடுவதற்காக 2018.07.24 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆனாலும், குறித்த ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படாததுடன், துரிதமாக இவ் ஒப்பந்தத்தை மேற்கொள்வது பொருத்தமானதென இருதரப்பினரும் அடையாளங் கண்டுள்ளனர்.

உத்தேச ஒப்பந்தத்தின் கீழ் எந்தவொரு வகையான விமானமொன்றைப் பயன்படுத்தி உடன்பாடு எட்டப்பட்டுள்ள விமான வழியூடாக வாரமொன்றில் திட்டவட்டமான நேரசூசிக்கமைய 14 விமானப் பயண சேவைகளும், அத்துடன் விமான வழியாக பொருட்கள் போக்குவரத்துக்காக வாரமொன்றில் திட்டவட்டமான நேரசூசிக்கமைய 07 விமானப் பயண சேவைகளையும் மேற்கொள்வதற்கான இயலுமை உண்டு.

அதற்கமைய, இலங்கை அரசுக்கும் இத்தாலி அரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்