5
ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர் கைது ஹிக்கடுவை – கொனபினுவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நடனக் கலைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
37 வயதுடைய சந்தேக நபர் பாதாள உலக கும்பல் தலைவரின் உதவியாளர் ஒருவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடனமாடும் நடனக் கலைஞர் ஒருவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.