அம்பியூலன்ஸ் வண்டி – டிப்பர் வாகனம் விபத்து ; இருவர் காயம் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்பியூலன்ஸ் வண்டி அருகில் உள்ள வாய்க்காலினுள் தடம்புரண்டு வீழ்ந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு நோயாளிகளை அனுமதித்துவிட்டு கிளிவெட்டி வைத்தியசாலையை நோக்கி வரும் வழியிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.