எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி அனுமதி இல்லை – அமைச்சர் விஜித!

by wp_fhdn

எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‍நேற்றிரவு (20) முன்னணி ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்