2
நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் தமிழ் மரபுத்திங்கள் 18-01-2025 சனி அன்று பிரேடா பிரதேசத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளியில் தோரணம் கட்டி கோலம் போட்டு பெண்கள் சிறுவர் சிறுமியர் கும்மியடித்து மகிழ்ந்து பாடி ஆடி பொங்கலிட்டு மகிழ்ந்து கொண்டாட பொங்கல் பொங்க குரவையிட்டு மகிழ்ந்தார்கள்.
தொடர்ந்து நிகழ்வுச் சுடரேற்றலைத் தொடர்ந்து சிறப்புரைகள் நடனங்கள் கவிதைகள் பாடல்கள் என சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட அனைவரும் மகிழ்வுடன் உண்டு களிப்புடன் இந் நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.