by wamdiness

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 21 மற்றும் 23 வயதுடைய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஆவர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தங்களது கஸகஸ்தான் கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இருவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டுகள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கடவுச்சீட்டுகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, இந்த கடவுச்சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் பயணப்பொதிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் கடவுச்சீட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதற்கு முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் குவைத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்