by smngrx01

சர்ச்சைகளுக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில்   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில்  ஞாயிற்றுக்கிழமை   (19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த  சிலை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ  மற்றும் வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்