by smngrx01

ஊசி மலைக்குள் விழுந்தார் டென்மார்க் பிரஜை சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து திங்கட்கிழமை (20) காலை 6 45 மணி அளவில்  தவறி விழுந்து உள்ளார்.

அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு தூக்கி வந்து அவசர ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிரிழந்தது உள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப் பட்டு உள்ளது என மேலும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்