மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன் பதற்றம் மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே இன்று காலை 100 இற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி அப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் முன் நிர்மாணிக்கப்பட்ட பந்தல் காரணமாக தனிநபர்கள் குழுவொன்று வீதியை மறித்ததால் அமைதியின்மை தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து அதிகாரிகள் தடையை அகற்ற முயன்றபோது, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, இதனால் மோதல் ஏற்பட்டது.
சம்பவத்தின் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் மற்றும் குழப்பம் தொடர்பில், கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையை தணிக்க திருத்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ உட்பட பல பாதிரியார்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்