மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு !

by 9vbzz1

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ! on Monday, January 20, 2025

இரத்தினபுரி, எஹெலியகொட, தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் எஹெலியகொட, பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்